அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது! முதல்வர் சீ.வி.


கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களுடைய கருத்துக்களை, அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவேஇருந்து வந்தனர்.

அரசியலும் அரசாங்க நிர்வாகமும் மக்கள் மீது ஆணையிடுபவையாகஇருந்தனவையே அன்றி மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பனவையாகஇருக்கவில்லை.

தற்போது மக்கள் தங்களது கருத்துக்களை, அபிப்பிராயங்களை, மனஉணர்வுகளை, மனக்கிலேசங்களை வெளிப்படுத்த முன்வருகிறார்கள்.

Redress mobile service in Kilinochchi
அத்தகைய நிகழ்வுகள்நடைபெறுகின்ற போது அதனை இனவாதமாக சித்திரிப்பதற்கு தெற்கத்தையர்கள்முயற்சிக்கிறார்கள்.

இன்றைய குறை நிவர்த்தி நடமாடும் சேவையானது மக்களைநாடிவந்து மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு சேவையாகும் என்றார்.

இக்குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாமற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் மக்கள்என பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது! முதல்வர் சீ.வி. Reviewed by Author on October 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.