கண்ணாடி அறைக்குள் ஜெயலலிதா! சிகிச்சை முறையில் அதிரடி மாற்றம்.....
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் முதல்வரின் சிகிச்சை முறையில் மருத்துவர்கள் அதிரடி மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் படி, தொடக்கத்தில் முதல்வர் உடல்நிலையில் இருந்த பலவித சிரமங்களை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தினர். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. நுரையீரலில் நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் இரவில் சரியான உறக்கம் இல்லாமல் தவித்தார். தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் முதல்வர் பல சிரமங்களை எதிர்கொண்டார்.
இதையடுத்து, அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை தொடர்ந்தனர். ஆனாலும் நுரையீரல் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் லண்டனின் இருந்து வரவழைக்கப்பட்டார் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு. நேற்று மதியம் முதல்வருக்கு நடந்த நுரையீரல் தொடர்பான சிறப்பு சிகிச்சையை அடுத்து திட ஆகாராமோ, வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்வதிலோ சில நாட்களுக்கு சிரமம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவருக்கு குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. நேற்று சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் சி.சி.யூ. வார்டில் (கிரிட்டிக்கல் கேர் யூனிட் ) இருந்து சிறப்புக் கவனிப்பு வழங்கப்படும் எம்.சி.சி.யூ. (மெடிக்கல் கிரிட்டிக்கல் கேர் யூனிட்) வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
முழுக்க கண்ணாடிகள் சூழ்ந்த இந்த அறையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். இன்னும் ஓரிரு நாள்களில் திட உணவுகளை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொடர் சிகிச்சையின் பலனாக இன்னும் சில தினங்களில் முதல்வர் கார்டனுக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
கண்ணாடி அறைக்குள் ஜெயலலிதா! சிகிச்சை முறையில் அதிரடி மாற்றம்.....
Reviewed by Author
on
October 01, 2016
Rating:

No comments:
Post a Comment