இலங்கையின் நிர்வாகத் தலைவராக தமிழர் செயற்பாடு! வரலாற்றில் ஏற்பட்ட திருப்பம்,,,,
தற்போது இந்த நாட்டின் முதன்மைக் குடிமகன் பிரதம நீதியரசர் கே.சிறிபவன் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதம பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.சிறிபவன் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் அரிதாகவே ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வது பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நிர்வாகத் தலைவராக தமிழர் செயற்பாடு! வரலாற்றில் ஏற்பட்ட திருப்பம்
இலங்கையின் தற்போதைய நிர்வாகத் தலைவராக தமிழர் ஒருவர் செயற்படும் வரலாற்றுத் திருப்பம் ஒன்று தற்போதைய நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக பதவிநிலையில் அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் தற்போதைக்கு நாட்டின் நிர்வாகத் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இலங்கையின் வரலாற்றில் 1981ம் ஆண்டு முதற்தடவையாக சிறுபான்மை இனத் தலைவர்களில் ஒருவரும் , அன்றைய சபாநாயகருமான பாக்கீர் மாக்கார் நாட்டின் நிர்வாகத் தலைவராக செயற்பட்டிருந்தார்.
அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உச்சி மகாநாடொன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் பிரேமதாச ஜுலை 29ஆம் திகதி 1981ல் நடைபெற்ற டயானா-சார்ள்ஸ் திருமணத்தில் கலந்துக் கொள்ளச் சென்றிருந்தார்.
அதன் காரணமாக நிர்வாக அமைப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த சபாநாயகர் பாக்கீர் மாக்கார் ஒருவாரம் வரையில் நாட்டின் பதில் தலைவராக செயற்பட்டிருந்தார். அதே நிலைமை தற்போது 35 வருடங்களின் பின் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இந்தியா சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவும் சீனாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான கே. ஸ்ரீபவன் தற்போது இலங்கையின் பதில் நிர்வாகத் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நிர்வாகத் தலைவராக தமிழர் செயற்பாடு! வரலாற்றில் ஏற்பட்ட திருப்பம்,,,,
Reviewed by Author
on
October 17, 2016
Rating:

No comments:
Post a Comment