அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகள்!


இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் தமிழகத்திற்கு அகதியாக இடம்பெயர்ந்து சென்றவர்களில் 30 பேர் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளனர். 11 குடும்பங்களை சேர்ந்த இவர்கள் மதுரையில் இருந்து இலங்கை வரவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அகதிகள் தாயகம் திரும்புவதற்காக உதவிகளை அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயம் வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயம் அகதிகள் நாடு திரும்ப இலவச விமானப பயணச்சீட்டுகளையும், ஒருவருக்கு கொடுப்பனவாக தலா 75 அமெரிக்க டொலர்கள், போக்குவரத்து செலவாக 19 டொலர்கள், குடும்பம் ஒன்று தலா 75 அமெரிக்க டொலர்களையும் கொடுப்பனவாக வழங்குகிறது.

இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரத்து 863 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 110 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் அகதிகள்! Reviewed by Author on October 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.