கற்பழிப்பு குற்றங்கள் அதிகளவில் நிகழும் நாடு: ஐ.நா சபை பகீர் தகவல்....
சர்வதேச அளவில் மக்கள் தொகையின் சராசரி எண்ணிக்கையில் லைபீரியா நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 45 லட்சம் ஆகும்.
இந்நிலையில், லைபீரியா நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் குறித்து ஐ.நா சபையில் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில், லைபீரியா நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்களில் நான்கில் மூன்று பங்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் 800 கற்பழிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் 34 பேர் மட்டும் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கற்பழிப்பு குற்றங்களின் எண்ணிக்கை 800க்கும் அதிகமான இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், கற்பழிக்கும் பெரும்பாலான ஆண்கள் அப்பெண்களுக்கு அறிமுகமானவர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருப்பதால் அக்குற்றத்தை வெளியே சொல்ல தயங்குகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் குற்றத்தை வெளியே கூறினால் கொலை செய்யப்படலாம் என அஞ்சும் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அநியாயத்தை வெளியே கூற தயங்குகின்றனர்.
கடந்த 1989 முதல் 2000 ஆண்டு வரை லைபீரியாவில் நிகழ்ந்த உள்நாட்டு போரின் காரணமாக அந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்கள் மற்றும் சிறுமிகளில் சுமார் 77 சதவிகிதம் வரை கற்பழிக்கப்பட்டனர்.
தற்போது கற்பழிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பெண்களில் 18 வயதிற்கு குறைந்தவர்களே அதிகம். மேலும், இவர்களில் 5 பேர் 5 வயதிற்கும் குறைவானர்கள் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.
லைபீரியா நாட்டில் தொடரும் இக்கற்பழிப்பு குற்றங்களை தடுக்க முடியாத அளவிற்கு அந்நாட்டு அரசு பலவீனமாக செயல்படுவதாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கற்பழிப்பு குற்றங்கள் அதிகளவில் நிகழும் நாடு: ஐ.நா சபை பகீர் தகவல்....
Reviewed by Author
on
October 16, 2016
Rating:

No comments:
Post a Comment