தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய புலி....
இந்தியாவில் வெள்ளை புலி ஒன்று தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து உதய்பூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட ராமா என்ற வெள்ளை புலியே இவ்வாறு நெகிழவைத்துள்ளது.
டெல்லியில் பிறந்த வெள்ளை புலி குட்டியிலேயே சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
புலி குட்டியிலிருந்தே தமிழில் பயிற்சி பெற்றதால் தான் தமிழ் மொழிக்கு அடிபணிவதாக கூறப்படுகிறது.
தற்போது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு ராமா வெள்ளை புலி வரவுள்ளது.
இந்நிலையில், உதய்பூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளின் கோரிக்கை படி வண்டலூர் பூங்காவில் ராமாவுக்கு பயிற்சியளித்த ஊழியர் ராஜஸ்தான் சென்று அங்குள்ள ஊழியருக்கு சில தமிழ் சொற்களை கற்பித்துள்ளார்.
தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய புலி....
Reviewed by Author
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment