அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவுக்குள் ஊடுருவியிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்


சிரியா மற்றும் ஈராக்கில் பயிற்சி பெற்ற 400 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிரித்தானியாவுக்குள் திரும்பியுள்ளதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட சுமார் 400 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 14 பயங்கரவாதிகளை கைது செய்து நாட்டு நலன் கருதி சிறையில் அடத்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்போது விளக்கமளித்த அரசு, சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து ஆயுத பயிற்சி பெற்ற பிரித்தானியர்கள் 54 பேர் மட்டுமே திரும்பியுள்ளதாகவும் அவர்களில் 14 பேரை கைது செய்துள்ளதாகவும், எஞ்சிய நபர்களை வெகு விரைவில் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக அரசு தவறான தகவல்களை அளித்திருந்ததாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுத பயிற்சிகள் மேற்கொண்ட 400 பயங்கரவாதிகள் தற்போது நாடு திரும்பியுள்ளதாக உறுதியாக தகவல்கள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் யுத்தகளத்தில் பெரும் நாசத்தை விளைவிக்கும் திறமை பெற்றவர்கள் எனவும் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்று பிரித்தானியாவிலும் நடத்தவும் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றொடுக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்விவகாரத் துறை அமைச்சு பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று இதுவரை 850 பிரித்தானியர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து போரிட சென்றுள்ளதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் யுத்தக்களத்திலும் ட்ரோன் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 400 பேர் தற்போது பல கட்டங்களிலாக பிரித்தானியாவுக்குள் திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அமைச்சர்கள் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த மறுத்துள்ளது மட்டுமின்றி தற்போது சிறையில் அடைபட்டுள்ள 14 பேர் மட்டுமே ஐ.எஸ் அமைப்பிற்காக ஈராக் மற்றும் சிரியாவில் போராடினர் என்றும் கூறி வருகின்றனர்.
பிரித்தானியாவுக்குள் ஊடுருவியிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: வெளியான அதிர்ச்சி தகவல் Reviewed by NEWMANNAR on October 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.