மன்னார் எமில்நகர், பூண்டிமாதா முன்பள்ளி, ஆசிரியர் தின கௌரவிப்பு நிகழ்வு-PHOTOS
ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மன்னார் பூண்டிமாதா முன்பள்ளி ஆசிரியர்களினை கௌரவிக்கும் நிகழ்வு 06.10.2016 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு முன்பள்ளியில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பெற்றோர், சிறுவர்களுடன் இணைந்து வேள்ட் விசன் நிறுவன மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திரு.உதயன், மன்னார் வலய முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி.அனுலா ஆகியோரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் இருந்ததுடன். இந்நிகழ்வு முற்றுமுழுதாக பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. எமது சிறார்கள் மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பெற்றோர்களினால் அழைத்துவரப்பட்டு தமிழர் பண்பாட்டுப்படி ஆராத்தி எடுத்து சிறுவர்களினால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு ஆசிரியர்களும், அழைக்கப்பட்டவர்களும் வரவேற்கப்பட்டனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி, பெற்றோர்களது ஏற்பாட்டில் ஆசிரியர்களினால் கேக் வெட்டி ஆசிரியர்களால் சிறுவர்களுக்கும், சிறுவர்களால் ஆசிரியர்களுக்கும் ஊட்டப்பட்டு ஆடல், பாடல், கவிதை என மிகவும் சிறப்பாகவும், மகிழ்வாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எமில்நகர், பூண்டிமாதா முன்பள்ளி, ஆசிரியர் தின கௌரவிப்பு நிகழ்வு-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
October 07, 2016
Rating:
No comments:
Post a Comment