அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாலியாறு உட்பட எட்டுபாலங்கள் விரைவில் புனரமைப்பு

பூநகரி - மன்னார் வீதியில் வருடாவருடம் பருவமழை காலத்தில் பயணிகளுக்கு பலத்த அசௌகரியங்களை கொடுக்கும் மண்டக்கல்லாறு மற்றும் பாலியாறு பாலங்கள் உள்ளிட்ட 8 பாலங்கள் சுமார் 3785 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளன

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும். என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூநகரி - மன்னார் வீதியில் (யு-32) உள்ள மண்டக்கல்லாறு, பாலியாறு பாலங்கள் மிக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் உள்ளன.ஏ32 வீதி புனரமைப்பு செய்யப்பட்டபோதும் மேற்படி பாலங்கள் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் வருடாவருடம் பருவமழை காலத்தில் மேற்படி இரு பாலங்களையும் மேவி மழைநீர் ஓடுவதனால் போக்குவரத்து முற்றாக தடைப்படும்.

இந்தக்காலங்களில் படகுகள் மூலமாக மக்கள் குறித்த இரு பாலங்களையும் கடக்க உதவிகள் செய்யப்படுகின்றன.இதனால் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் நன்மையடைவர். ஆனால் சொந்த வாகனங்களில், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்படி மண்டக்கல்லாறு, பாலியாறு பாலங்களை உடனடியாக புனரமைப்பு செய்யவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததுடன், ஏ32 வீதி புனரமைப்பு செய்யப்பட்டபோது இந்த பாலங்கள் எதற்காக புனரமைப்பு செய்யப்பட்டிருக்கவில்லைஎனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குறித்த மண்டக்கல்லாறு மற்றும் பாலியாறு பாலங்கள் உள்ளிட்ட 8 பாலங்கள் வடக்கில் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த பாலங்கள் புனரமைப்பிற்காக 3785 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பாலங்கள் புனரமைப்பு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மன்னார் பாலியாறு உட்பட எட்டுபாலங்கள் விரைவில் புனரமைப்பு Reviewed by NEWMANNAR on October 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.