வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் விபத்தில் உயிரிழப்பு
வடமாகாணசபை உறுப்பினரும் பிரதி அவைத் தலைவருமான அன்டனி ஜெயநாதன், இன்று காலை முள்ளியவளைப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்மரணமடைந்தார்.
அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் விபத்தில் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
October 01, 2016
Rating:

No comments:
Post a Comment