அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சி அரசின் ஊழல்களையும் விசாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு


தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவை குறித்தும் எந்தவித தகுதி, தராதரமும் பாராது விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனா திபதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த உத்தரவிற்கு அமையவே பிரதமரின் மிக நெருங்கிய நண்பரான செல்வந்த வர்த்தகர் திருக்குமார் நடேசன் நேற்றைய தினம் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கினறன.

அர்ஜூணன் மகேந்திரன் மத்திய வங்கியில் ஆளுநராக பதவி வகித்த காலப்பகுதியான 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் விற்பனையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில், பொது நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற செயற்குழுவான கோப் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனும்பிரதமரின் நெருங்கிய நண்பராவார். இந்த நிலையிலேயே பிரதமரின் மற்றுமொரு நெருங்கிய சகாவான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் திருக்குமார் நடேசனின் கைதும் இடம்பெற்றுள்ளது.

பசில் ராஜபக்ச தொடர்புபட்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த மல்வான பிரதேசத்திலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை தொடர்பிலேயே திருக்குமார் நடேசன் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடு விக்கப்பட்டார்.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவற்றை ஜனாதிபதி எப்.சீ.ஐ.டி யிடமும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமும் ஒப்படைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, இதன்போது எவரது தலையீடுகளு க்கும் அடிபணியாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டிருக்கின்றார்.
நல்லாட்சி அரசின் ஊழல்களையும் விசாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு Reviewed by NEWMANNAR on October 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.