யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டே கொலை [படங்கள் இணைப்பு]
யாழ். பல்கலைக்கழக மாணவர்களான அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்.
இன்று யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மரண விசாரணை அதிகாரியினால் பிரேதபரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரது உடலில் மூன்று துப்பாக்கிச் சன்னங்கள் பாய்துள்ளதாகவும் மற்றவருடைய உடலில் துப்பாக்கி சன்னங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளை யாழ் வைத்திய சாலையினை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இந்த துப்பாக்கிச் சூடுயாரால் நடத்தப்பட்டுள்ளது இராணுவமா?? பொலிசாரா?? அல்லது வேறு குழுக்களா?? இதனை ஆதாரபூர்வமாக நிருபித்தால் மட்டுமே குறித்த சடலங்களை எடுக்கமுடியும் என்ற பலத்த வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளமையினால் யாழ் போதனா வைத்திய சாலையில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையினுள் பல்கலைக்கழக மாணவர்கள் உட்புகுந்தமையினால் வைத்திய சாலையின் பிரேத பரிசோதனை அறையில் இருந்து மாணவர்களை வெளியேற்றி கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்தகவல்கள் கிடைக்கின்றன

Reviewed by NEWMANNAR
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment