சச்சின் சதம் அடித்தால் எங்கே போவார் தெரியுமா?
சச்சின் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தால் ஷாப்பிங் செல்வார் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கங்குலியிடம் சச்சினைப் பற்றி தெரியாத ரகசியங்கள் இருந்தால் கூறுங்கள் என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கங்குலி, சச்சின் ஒரு சிறந்த ஆட்டக்காரர். அவர் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தால் அடுத்த நாளே ஷாப்பிங் சென்று விடுவார். இது யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக வைத்திருப்பார். அவருக்கு தேவையான அனைத்தும் வாங்கி வருவார்.
அதுபோல உடைகள் விவகாரத்தில் சச்சின் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார் என கூறினார்.
மேலும் லட்சுமண் 4 வது 5 வது வீரராக களமிறங்கினாலும் தொடந்து குளித்துக் கொண்டே இருப்பார். போட்டிகள் முடிந்து அனைவரும் பேருந்தில் இருந்தால், அவர் எப்போதுமே கடைசியாகத் தான் வருவார். இதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
சச்சின் சதம் அடித்தால் எங்கே போவார் தெரியுமா?
Reviewed by Author
on
October 01, 2016
Rating:

No comments:
Post a Comment