கிளாரி கிளிண்டனுக்கு புதிய சவால் விடுத்த டிரம்ப்......
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, ஆளும் ஜானநாயக கட்சியின் வேட்பாளரான கிளாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான விவாதங்களில் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களும் அலசப்படுகின்றன.
இதில் டிரம்புக்கு எதிரான பெண் சர்ச்சைகள், அவரை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு போனது எனலாம்.
இந்நிலையில், இன்று ஒரு பேரணியில் டிரம்ப் பேசுகையில், இதுவரை பேசியதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள். இப்போது நான் சவால் விடுகிறேன்.
எங்கள் இருவருக்குமே போதை மருந்து சோதனை நடத்துங்கள். அதில் யார் தகுதிபெறுகிறார் என பார்க்கலாம் என்றார்.
ஆனாலும், கிளாரி கிளிண்டன் போதை மருந்து பழக்கம் உள்ளவர் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் டிரம்ப் முன்வைக்கவில்லை. மருத்துவ சோதனைக்கு மட்டுமே கோரிக்கை வைத்தார்.
இதனிடையில், அவர்கள் இருவருக்கும் உள்ள மக்கள் ஆதரவை பற்றி ஒரு சர்வேயும் ஊடகங்களால் எடுக்கப்பட்டுள்ளது. அதில் கிளாரி கிளிண்டனுக்கு வெற்றி வாய்ப்பு 49 சதவீதமும் டிரம்புக்கு 40 சதவீதமும் இருப்பது தெரியவருகிறது.
கிளாரி கிளிண்டனுக்கு புதிய சவால் விடுத்த டிரம்ப்......
Reviewed by Author
on
October 16, 2016
Rating:

No comments:
Post a Comment