விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் - Photos.
மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் வாசிப்பு குறைபாடுகளைக் கொண்ட மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (26) சனிக்கிழமை காலை வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளார்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 பேருக்கு இவ்வாறு வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் குறித்த மக்களை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வந்து பார்வையிட்ட போதும் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித உதவிகளும்,நிவாரணங்களும் இது வரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும் தமது கிராமத்திற்கு பல முறை விஜயம் செய்து தமது குறைபாடுகளை கேட்டு உதவிகளை மேற்கொண்டுள்ளதோடு குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் தினமான இன்று (26) சனிக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு விஜயம் செய்து குறித்த கிராமத்தில் உள்ள வாசிப்பு குறைபாடுகளைக் கொண்ட சுமார் 80 பேருக்கு வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கியுள்ளமை குறித்து குறித்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் - Photos.
Reviewed by NEWMANNAR
on
November 26, 2016
Rating:
No comments:
Post a Comment