கருத்துக்கணிப்புகளை முறியடித்த டொனால்ட் டிரம்ப்: ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்காவில் கடந்த 575 நாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களே பரவி வந்துள்ளன.
அமெரிக்க எல்லைகளை சுற்றி சுவர்களை எழுப்புவது, தகுதியற்ற வெளிநாட்டினர்களை திருப்பி அனுப்புவது, சிறுப்பான்மையினத்திவரிடம் எதிர்ப்பு, பாலியல் வழக்குகள் என பல்வேறு சர்ச்சைகளில் டொனால்ட் டிரம்ப் சிக்கியுள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனக்கு 70 சதவிகித வெற்றி வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்துள்ளன.
ஆனால், இன்று காலை முதல் வெளியான முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் முறியடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
சற்று முன்னர் வெளியான தகவலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 232 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47 சதவிகித வாக்குகள் பெற்று 209 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும் கூட, இந்த முடிவுகளில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகளை முறியடித்த டொனால்ட் டிரம்ப்: ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு?
Reviewed by Author
on
November 09, 2016
Rating:

No comments:
Post a Comment