நியூசிலாந்து மலை உச்சியில் இருந்து குதித்து இலங்கை இளைஞன் சாதனை
உலகின் பல நாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து பல்வேறு சாகச விளையாட்டு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றமை ஒரு பொழுதுபோக்கு விடயமாகும்.
மிகவும் உயரமான மலை உச்சியில் இருந்து நதிகளுக்குள் பாய்தல், பனிச்சரிவில் இருந்து நதிகளுக்கு பாய்தல், பரசூட் உதவியுடன் கீழ் பாய்தல் போன்ற பல சாகச விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
இலங்கையிலும் இவ்வாறான விளையாட்டுக்கள் கித்துல்கலவுக்கு அருகில் நடத்தப்படுகின்ற போதிலும் அது ஆபத்தான விளையாட்டுகள் அல்ல.
உலகில் பிரபலமான சாகச விளையாட்டொன்றில் இலங்கையர் ஒருவர் பங்குபற்றி சாதித்துள்ளார்.
நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த கிஹான் அபேவிக்ரம என்பவரே இந்த சாதனையை செய்துள்ளார். இவர் 1984ஆம் ஆண்டு மாத்தறை உயன பிரதேசத்தில் பிறந்துள்ளார்.
அண்மையில் அவர் 500 அடிக்கும் உயரமான மலை உச்சியில் இருந்து ஸ்பிரிங் கேபிள் ஒன்றின் ஊடாக பெரிய நதி ஒன்றில் பாய்ந்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னரும் பரசூட் உதவியுடன் மேலிருந்து கீழே பாயும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து மலை உச்சியில் இருந்து குதித்து இலங்கை இளைஞன் சாதனை
Reviewed by Author
on
November 09, 2016
Rating:

No comments:
Post a Comment