உடலுக்கு வெளியே இருதயம் : அமெரிக்காவில் அதிசய குழந்தை...
உடலுக்கு வெளியே இருதயம் இருக்கும்படி பிறந்த கைரன் வெயிட்ஜ் என்ற பெண் குழந்தை, 'ஆப்பரேஷனுக்கு' பின் 20 மாதங்களாக ஆரோக்கியமாக உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரையன், காட்லின் தம்பதி, வடக்கு டகோட்டா மாநில தலைநகர் பிஸ்மார்க்கில் வசிக்கின்றனர்.
கடந்த 2014ல் காட்லின் கர்ப்பம் அடைந்தார். வயிற்றில் இருந்த குழந்தைக்கு 'எக்டோபியா கார்டிஸ்' என்ற பாதிப்பு ஏற்பட்டது சோதனையில் கண்டறியப்பட்டது.
குழந்தையின் இருதயம், கல்லீரல், குடல் பகுதிகள் மார்புக்கு வெளியே வளர்ந்தன. லட்சத்தில் ஒருவருக்குத் தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
இதை 'அல்ட்ரா சவுண்டு' சோதனையில் உறுதி செய்த டாக்டர்கள், குழந்தையின் உடல் போன்ற '3 டி' மாடல் அமைப்பை உருவாக்கி, பிரசவத்துக்குப் பின் எப்படி ஆப்பரேஷன் செய்வது என பல மாதங்களாக தயாராகினர்.
பின், குழந்தை கைரன் வெயிட்ஜ் பிறந்தது. அதை துாக்கிக் கொஞ்சக் கூட பெற்றோருக்கு அனுமதி இல்லை. நேராக 'ஆப்பரேஷன் தியேட்டருக்கு' கொண்டு செல்லப்பட்டார்.
இங்கு 60 டாக்டர்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்துக்குப் பின், இருதயம், கல்லீரல், குடல் பகுதிகளை குழந்தையின் உடல் பகுதிக்குள் வைத்து, வெற்றிகரமாக 'ஆப்பரேஷனை' முடித்தனர்.
தற்போது 20 மாதங்களாக குழந்தை கைரன் உடல்நலத்துடன் உள்ளார். இருப்பினும், உணவுப் பொருட்கள் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள 'டியூப்' வழியாகத் தான் தரப்படுகிறது.
இன்னும் பல 'ஆப்பரேஷன்' இந்த குழந்தைக்கு தேவைப்படுகிது.
- Dina Malar-
உடலுக்கு வெளியே இருதயம் : அமெரிக்காவில் அதிசய குழந்தை...
Reviewed by Author
on
November 22, 2016
Rating:

No comments:
Post a Comment