மாசுகளுடன் "ஜெலி' உற்பத்தி சந்தைப்படுத்தல் 1 1/2 இலட்சம் ரூபா தண்டம் விதித்து பொதிகளை மீள பெற உத்தரவு-Photo
சிறுவர்களுக்கான ஜெலி சிற்றுண்டிப் பதார்த்தத்தில் இறந்த நிலையில் பூச்சிகள் மற்றும் தூசுகளை உள்ளடக்கி நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உற்பத்தி செய்து விற்பனைக்கு விட்டிருந்த தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக ஒன்றரை லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்ட்டதுடன் நாடுமுழுவதிலும் உள்ள சந்தைகளில் இருந்து குறித்த ஜெலி பொதிகளை உடனடியாக மீளப்பெறுமாறும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் நேற்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக பாவனையாளர் அதிரகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரம் கருத்தது தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சிறுவர்கள் விரும்பி உண்ணும் ஜெலி எனும் உணவுப்பதார்த்தத்தில் தூசு துணிக்கைகள் மற்றும் இறந்த பூச்சிகள் தென்படுவதாகவும் கடந்த மே மாதம் அளவில் பாவனையாளர்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தன.
அதனடிப்படையில் நாம் குறித்த விடயத்தினை ஆராய்வதற்கென இரண்டு உத்தியோகத்தர்களை விசேட விதமாக நியமித்து யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் களப்பரிசோதனை மேற்கொண் டோம்.
குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பல வர்த்தக நிலையங்களில் இருந்து, பாவனையாளர்களின் முறைப்பாட்டினை உறுதி செய்யும் வகையில் மேற்குறித்த குறைபாடுகளுடன் ஐந்து நிறுவனங்களின் உற்பத்திகளான 35க்கு மேற்பட்ட ஜெலி பொதிகள் சான்றுப்பொருட்களாக கைப்பற்றப்பட்டன.
அதில் அதிகளவு சந்தையில் ஜெலி பொதி விற்பனைக்கு வைத்திருந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் யாழ் மாவட்டத்துக்கான முகவர் ஆகியோரை யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு அழைத்திருந்தோம். மேற்குறித்த விடயத்தினை அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களால் சந்தைப்படுத்தப்பட்டிருந்த குறித்த ஜெலி பதார்தங்களை சந்தையில் இருந்து மீளப்பெறு மாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதேபோல் ஏனைய 4 நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம்.
அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு சில கடைகளில் இருந்து அப்புறப்படுத்தியிருந்தனர். ஆனால் உரிய முறையில் அவர்கள் அதை மீள பெற்றுக்கொள்ளாததுடன் மேலதிகமாக இறக்குமதியும் செய்திருந்தனர். அந்த வகையில் முகவர்களின் நிலையங்களில் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையிலும் பல ஜெலி பொதிகள் எம்மால் கைப்பற்றப்பட்டதன் காரணமாகவும் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தோம். ஏனைய 4 நிறு வனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி மேலதி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
அந்தவகையில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட குறி த்த நிறுவனத்துக்கு நீதிமன்றால் அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டு நேற்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மன்றில் ஆஜராகிய பாவனையாளர் அதிகாரசபையினர், கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் தூசுகளுடன் ஜெலி உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டமை, இலகுவில் அடையாளப்படுத்தக் கூடிய வகையில் இறந்த நிலையில் பூச்சிகளை உள்ளடக்கி உற்பத்தி செய்து விற்பனைக்கு விடப்பட்டமை மற்றும் உற்பத்தி மற்றும் காலவதி திகதிகளை இலகுவில் மாற்றியமைக் கக்கூடிய வகையில் சுற்றுத்துண்டு வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளமை போன்ற குற்றங்களை முன்வைத்து குறித்த நிறுவனத்துக்கு எதிராக மன்றில் சான்றுப் பொருட்களை கையளித்திருந்தனர்.
நிறுவன உரிமையாளர் மேற்குறித்த குற்றத்தினை ஒப்புக்கொண்டதனை அடுத்து நிறுவன உரிமையாளரையும் முகவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் தூசுகளுடன் ஜெலி உற்பத்தி செய்த குற்றத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணமும் உயிரிழந்த பூச் சியை உள்ளடக்கி பொதி செய்த குற்றத்துக்கு எதிராக 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்ததுடன், குறித்த நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்களை நாடு முழுவதிலும் உள்ள சந்தைகளில் இருந்து உடனடியாக மீளப்பெற வேண்டும் என உரிமையார்களுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இலகுவாக மாற்றக்கூடிய சுற்றுத்துண்டை வேறு முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதவான் குறித்த நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள் சந்தையில் இல்லை என்பதனை உறுதி செய்து எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பாவனையாளர் அதிகாரசபை தலைமைக் காரியாலயத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மீண்டும் இவ்வாறன சீரற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டு பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டால் நிறுவனம் நிரந்தர மாக மூடப்படும் என்பதனை கவனத்தில் எடுத்து செயற்படுமாறும் நீதவான் எச்சரித்திருந்தார்.
மாசுகளுடன் "ஜெலி' உற்பத்தி சந்தைப்படுத்தல் 1 1/2 இலட்சம் ரூபா தண்டம் விதித்து பொதிகளை மீள பெற உத்தரவு-Photo
Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment