அண்மைய செய்திகள்

recent
-

முதல் சதமே முச்சதம்: குவியும் வாழ்த்துக்கள்...


சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் ஆட்மிழக்காமல் 381 பந்துகளிற்கு 32 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்களாக 303 ஓட்டங்களை பெற்று தனது முதல் சதத்தையே முச்சதமாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை வீரருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்று முச்சதம் அடித்து உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது சாதனையால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் என்ன ஒரு வீரர், என்னவொரு ஆட்டம்’ உலக அளவில் 3-வது வீரராகவும், இந்திய அளவில் முதல் வீரராகவும் சதத்தை முச்சதமாக மாற்றி சாதனை படைத்துள்ளீர்கள்.

 கபில் தேவ், கருண் நாயர் செய்த சாதனையை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்கிறேன். இளம் வீரர்கள் சிறந்தவராக தெரிகிறார். அவருடைய பேட்டிங் ஒருவித சுவாரசியமாக உள்ளது. இதுபோன்று சாதனை நிகழ்த்த ஒரு சில பேட்ஸ்மேன்களாலேயே முடியும். என்றும்

விவிஎஸ் லட்சுமண், கருண் நாயம் சதம் அடித்ததும் ரன் வேட்டையாடியதை பார்க்க அருமையாக இருந்தது என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் டிராவிட், கருண் நாயரால் பெருமையாக உள்ளது. அவர் கடின உழைப்புடன் போட்டிக்காக தன்னை அர்ப்பணிக்கும் திறன் கொண்டவர்.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், சேவக்குக்கு பிறகு 2-வது இந்திய வீரராக முச்சதம் அடித்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



அஜிங்க்ய ரஹானே, சிறப்பா விளையாடிதற்கு வாழ்த் துக்கள். இந்த முச்சதத்துக்கு நீங்கள் தகுதியானவர்.

 கிறிஸ் கெய்ல், இளம் வீரரான உங்களை 300 ரன்கள் குழு பட்டியலில் வரவேற்கிறேன்.

 ஷேன் வார்ன், படுக்கையில் இருந்தபடி இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்த்தேன். கருண் மிகச்சிறப்பாக விளையாடினார். எனினும் இந்திய அணி 40 நிமிடங்களுக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்க வேண்டும். என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ள கருண் நாயருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என வாழ்த்தியதோடு இந்திய அணியில் சிறந்த சகல துறை வீரராக விளங்கிக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளையும் பாராட்டுகிறேன். என கூறியுள்ளார்.


அத்தோடு ஹரபஜன் சிங், இர்பான் பதான் முற்றும் பலரும் இவருடைய சாதனையை பாராட்டி வருவதோடு, இது தொடர வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 











முதல் சதமே முச்சதம்: குவியும் வாழ்த்துக்கள்... Reviewed by Author on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.