மலிங்காவை தக்க வைத்துக் கொண்ட மும்பை அணி: எவ்வளவு கோடிக்கு தெரியுமா?
10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
இந்நிலையில் வீரர்களை விடுவிக்க, அடுத்த அணியில் இருந்து வீரர்களை மாற்றிக் கொள்ள மற்றும் வீரர்களை தக்கவைக்க கடந்த 15ம் திகதி கடைசி திகதியாக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி தற்போது ஒவ்வொரு அணியும் ரிலீஸ் மற்றும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் மும்பை அணியில் விளையாடி வந்த இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மலிங்கா ரூ.7.5 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள மலிங்கா, அதில் இருந்து முழுவதும் குணமடையாத நிலையிலும் மும்பை அணி அவரை தக்க வைத்துக் கொண்டது.
அதேவேளை புனே அணியில் விளையாடி வந்த மற்றொரு இலங்கை வீரரான திசர பெரேரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பல முன்னணி வீரர்கள் அவர்கள் விளையாடி வந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே செயல்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் அவுஸ்திரேலிய தலைவர் ரிக்கி பொண்டிங்கிற்கு பதிலாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலிங்காவை தக்க வைத்துக் கொண்ட மும்பை அணி: எவ்வளவு கோடிக்கு தெரியுமா?
Reviewed by Author
on
December 20, 2016
Rating:
Reviewed by Author
on
December 20, 2016
Rating:


No comments:
Post a Comment