இந்திய வீரங்கனை பி.வி சிந்து 6-வது இடத்திற்கு அற்புதமான ஆண்டாம்...
BWF தரவரிசை பட்டியலில் சீன தைபே நாட்டு வீராங்கனை TAI Tzu Ying முதலிடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை Carolina MARIN இரண்டாம் இடத்தையும், கொரிய நாட்டு வீராங்கனை SUNG Ji Hyun மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்திய வீரங்கனை பி.வி சிந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு என கூறும் சிந்து, இந்த ஆண்டு எனக்கு அற்புதமாக இருந்தது. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் மிகப்பெரிய சாதனை, இதனால் எனது கனவு நனவானது.
சூப்பர் கிரீஸ் பட்டம் வெல்ல வேண்டும் என்று எப்போதும் நினைத்து கொண்டு இருப்பேன்.
அதுவும் (சீன ஓபன்) நிறைவாகிவிட்டது, தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கண்டிப்பாக நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு, நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்.
ஏனென்றால் என் மீது பெரிய பொறுப்பு இருக்கிறது, இப்போது அடைந்திருக்கும் நிலையை தக்க வைப்பது சவால் ஆனது, இதற்காக நிறைய உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்திய வீரங்கனை பி.வி சிந்து 6-வது இடத்திற்கு அற்புதமான ஆண்டாம்...
Reviewed by Author
on
December 23, 2016
Rating:
Reviewed by Author
on
December 23, 2016
Rating:


No comments:
Post a Comment