பிறந்து 41 நாட்களேயான குழந்தையின் வரலாற்று சாதனை!
விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு தியோ ஆர்மோண்டி என்று பெயர் சூட்டி அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த மகிழ்ச்சி குழந்தை பிறந்து 40 நாட்கள் வரை தான் நீடித்தது. திடீரென குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட அவன் பெற்றோர் மருத்துவர்களிடம் காட்டியுள்ளனர்.
மருத்துவர்கள் தியோவை சோதித்ததில் அவனுக்கு விசித்திர உயிர் கொல்லி நோய் இருப்பதாகவும் அவன் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவன் பெற்றோர் மனதைரியத்தை வரவழைத்து கொண்டு தங்கள் குழந்தையின் உடலுறுப்பை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, இமோகம் என்னும் ஐந்து மாத பெண் குழந்தைக்கு நுரையீரல் தேவைப்பட குழந்தை தியோவின் நுரையீரலை இமோகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள்.
இதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் அதாவது பிறந்து 41 நாட்களிலேயே தனது உடலுறுப்பை தானம் செய்த சாதனையை குழந்தை தியோ நிகழ்த்தியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்து 41 நாட்களேயான குழந்தையின் வரலாற்று சாதனை!
Reviewed by Author
on
December 23, 2016
Rating:
Reviewed by Author
on
December 23, 2016
Rating:


No comments:
Post a Comment