தேசத்துரோகிகள் என பெயரிடப்பட்டவர்கள் நாட்டிற்காகப் போராடியவர்கள் என அறிவிப்பு
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பெயரிடப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட 19 பேரை அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து, அவர்கள் நாட்டிற்காகப் போராடியவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
1818 ஆம் ஆண்டு ஊவவெல்லஸ போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கியமையால், கெப்பட்டிப்பொல திசாவ உள்ளிட்ட 19 பேர் தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டனர்.
ஜனாதிபதியினால் கொழும்பில் இன்று கைச்சாத்திடப்பட்ட விசேட ஆவணத்தின் பிரகாரம், அவர்கள் நாட்டிற்காகப் போராடியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசத்துரோகிகள் என பெயரிடப்பட்டவர்கள் நாட்டிற்காகப் போராடியவர்கள் என அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 09, 2016
Rating:

No comments:
Post a Comment