மன்னாரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்குகோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்த றிப்கான் -Photos
சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் தனது மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயணாளிகளுக்கு இன்று வியாழக்கிழமை(8) காலை மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தார்.
வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான என்.எம்.முனவ்பர் ,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.முஜாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்கஞ்சுகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்குகோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்த றிப்கான் -Photos
Reviewed by NEWMANNAR
on
December 08, 2016
Rating:

No comments:
Post a Comment