தடை செய்யப்பட்ட பட்டி வலைகளை கடல் பரப்பில் இருந்து அகற்றக்கோரி மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.-Photos
தடை செய்யப்பட்ட பட்டி வலை மூலம் மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதினால் ஏனைய கடல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதீக்கப்பட்டு வருவதாக மட்டுப்படுத்தப்பட்ட வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.
-மன்னார் கடல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகளை அகற்றக்கோரி நேற்று புதன் கிழமை (21) காலை வங்காலை கிராம மீனவர்கள் மன்னார் மதவாச்சி பிரதான வீதி வங்காலை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
-இதன் போது படகுகளை வீதிக்கு அருகில் வைத்து தென் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகளை அகற்றுமாறு கோரி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் நீதிமன்ற தீர்ப்பை நடை முறைப்படுத்துங்கள் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதீர்கள், பாராம்பரியமாக வலைத்தொழில் செய்யும் மீனவர்களின் இடங்களில் பட்டி வலைகளை வைக்காதீர்கள், கரைவலை,சிறு தொழில் செய்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் பட்டிவலை தொழிலினால் பாதீக்கப்படுகின்றது, அதிகாரிகலே சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள், அதிகாரிகலே சட்ட விரோத தொழிலுக்கு துணை போகதீர்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு வங்காலை கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறவுச்சங்கம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பட்டி வலைகளை கடல் பரப்பில் இருந்து அகற்றக்கோரி மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 22, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 22, 2016
Rating:








No comments:
Post a Comment