வடக்கு மக்கள் இராணுவத்திடமிருந்து உதவியை பெற்றால்1000 வருடங்கள் சென்றாலும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது!
வடக்கு மக்கள் இராணுவத்திடமிருந்து உதவியை பெற்றால் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் இராணு வத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 71 ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப் பினர் அகிலதாஸ், வடக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சம் இராணுவம் இருப்பதாக உறுப்பினர் ரவி கரன் கூறுகின்றார். அவ்வாறு இருந்தாலும் அந்த இராணுவத்தை வெளியேற்ற காலம் எடுக்கலாம். இராணு வத்தை வெளியேறுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண முதலமைச்சரும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
எனினும் இராணுவத்தை வெளியேற்ற காலம் எடுக்கலாம் எனவே, அதுவரை இராணுவத்திடமிருந்து நாங்கள் உதவிகளை பெறலாம், இராணுவத்தில் நல்ல பொறியியல் படையணி உள்ளது. அதன் உதவி களையும் நாங்கள் பெறலாம். அண்மையில் கூட நெல்லியடி சந்தை தீப்பிடித்த போது குறித்த தீயை இராணு வத்தினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆகையால் இராணுவத்தின் உதவியை வடக்கு மாகாண சபை பெறலாமா? என முதலமைச்சரிடம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கிற்கு என இராணுவத்திடம் இருந்து உதவிகளை பெற்றால் அவர்களை ஆயிரம் வருடங்கள் சென்றா லும் வடக்கிலிருந்து வெளியேற்ற முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் இரணைமடு குளத்தை நானும் ஜனாதிபதியும் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மதிய போசனத்தை எடுத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம் கேட்டார்.
நாங்கள் இராணுவத்தை இங்கிருந்து வெளியேறுமாறு கூறிக்கொண்டு இராணுவத்திடம் உணவு உண்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியிருந்தேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் இராணுவத்திடமிருந்து உதவியை பெற்றால்1000 வருடங்கள் சென்றாலும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது!
Reviewed by Author
on
December 22, 2016
Rating:
Reviewed by Author
on
December 22, 2016
Rating:

No comments:
Post a Comment