அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை அதிகூடிய விலைக்கு பண்டிகைக்கால வியாபாரத்திற்கு இடம் ஒதுக்கீடு-பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு-மக்கள் பாதிப்பு.-Photos

மன்னார் நகர சபையினால் பண்டிகைக்கால தற்காலிக வியாபாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை வர்த்தகர்களுக்கு அதி கூடிய விலைக்கு நகரசபை குத்தகைக்கு வழங்கியுள்ளதன் காரணமாக வர்த்தகர்கள் தமது இலாபத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடத்தை விட இம்முறை அதி கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வருவதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகரசபையினால் பண்டிகைக்கால தற்காலிக வியாபாரத்திற்காக ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 185 கடைத்துண்டுகள் மூலம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மன்னார் நகர சபைக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மன்னார் நகரசபையின் செயலாளர் எல். றெனால்ட் பிறிற்றோ தெரிவித்தார்.

எனினும் குறித்த கடைகள் 13 ஆயிரம் ரூபாய் முதல் 67 ஆயிரத்து 800 ரூபாய் வரை வர்த்தகர்கள் ஏலம் மூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதி கூடிய பணத்தை கொடுத்து கடை அமைப்பதற்கான இடத்தை பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தமது வருமானத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடத்தை விட இம் முறை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் மன்னார் நகரசபை திட்டமிடாத வகையில் நகர சபைக்குற்பட்ட பகுதியில் தாம் நினைத்தபடி கடைகளை அமைக்க இடம் வழங்கியுள்ளதன் காரணத்தினால் மக்களின் இயல்பான நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மன்னார் நகர சபையின் நலன்புரிச் சங்கம் ஆரம்ப கட்ட ஒப்பந்த விலையில் கடைகள் பலவற்றை பெற்று சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை தென்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இறுதி நேரத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பிரதான வீதிக்கு அருகாமையில் பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் குறித்த வியாபார நிலையங்களுக்கு முன் நிறுத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்ற முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மன்னார் நகர சபை செயலாளர் உற்பட அதிகாரிகளின் திட்டமிடப்படாத நடவடிக்கைகளின் காரணமாக மன்னார் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














மன்னார் நகர சபை அதிகூடிய விலைக்கு பண்டிகைக்கால வியாபாரத்திற்கு இடம் ஒதுக்கீடு-பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு-மக்கள் பாதிப்பு.-Photos Reviewed by NEWMANNAR on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.