அண்மைய செய்திகள்

recent
-

வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆதங்கம்.


ஆங்கிலேயன் கோட்டை இருந்த இடத்தில் பண்டார வன்னியன் சிலை வைப்பதை கோட்டை விட்ட வட மாகாணசபை. வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆதங்கம்.1803 ஆம் ஆண்டு ஆவணி 25ம் திகதி பண்டார வன்னியன் ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய நாள். தற்போது முல்லைத்தீவு கச்சேரி இருக்கும் வளாகத்தின் மேற்கு பகுதியில் அந்த கோட்டை அடையாள சின்னமாக இருந்தது. 

அவை அனைத்தும் இன்று அழிக்கப்பட்டு விட்டமை துரதிஸ்டம். இருப்பினும் பண்டார வன்னியனின் ஒரு சிலை கோட்டை இருந்த இடத்தில் கச்சேரி வளாகத்தில் வைப்பதாக தொடங்கிய வட மாகாணசபை ஒன்றரை வருட விவாதத்தின் பின் கோட்டையை கோட்டை விட்டு பண்டாரவன்னியன் சிலையை றோட்டுக்கு கொண்டு வருவதாக முடிவெடுத்துள்ளனர். 

தங்கள் கடமைகளை சரியாக செய்ய முடியாத போலி தேசியவாதிகள் போராட்ட காலத்தில் கூட மக்களின் பணத்தை சூறையாடி விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்து பின்னர் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் வன்னி மண்ணில் இறுதி வரை மக்களோடு மக்களாக இருந்த எம் மீது கூச்சலிட்டு எதையும் போட்டுடைத்து விட முடியாது என்பதை வரலாறு பாடமாக கற்பிக்கும்.
வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆதங்கம். Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.