மன்னரில் கடந்த 10 தினங்களில் 63 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 தினங்களில் 63 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு நாளுக்கு நாள் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.
-இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 185 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மேலும் 5 தினங்களில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார் உப்புக்குளம், மூர்வீதி,சாவட்கட்டு,பெரியகடை, தாழ்வுபாடு,பேசாலை உள்ளிட்ட கிராமங்களிலே அதிகலவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 10 நாற்களில் 63 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பின் தாக்கம் மற்றும் பரவல் காணப்பட்டுள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது முழுமையாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
தமது வீடு மற்றும் சுற்றுப்புர பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்துள்ளவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தாழ்வுபாட்டு கிராமத்தில் டெங்கு நுளம்பின் பரவல் காணப்பட்ட நிலையில் மூடப்பட்ட பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களினூடாக டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சில தினங்களாக மூடப்பட்டிருந்த தனியார் கல்வி நிலையங்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமது வீடு மற்றும் சுற்றுப்புர பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்துள்ளவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தினூடாக மேற்கொள்ளப்படும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
மன்னரில் கடந்த 10 தினங்களில் 63 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட்.
Reviewed by Author
on
January 11, 2017
Rating:

No comments:
Post a Comment