வித்தியா படுகொலை வழக்கு 12 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேரினையும் விளக்கமறியலில் வைக்க ஊர்கா வற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகளினூடாக 12 சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர். எனினும் இம் மாணவி படுகொலை செய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் பூரணமாக கடந்துவிட்ட நிலையில் இன்னமும் குறித்த மாணவியின் வழக்கு விசாரணைகளானது நீதவான் நீதிமன்றிலேயே விசாரணையில் உள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த 12 சந்தேகநபர்களில் முதல் பத்து பேரினது நீதவான் நீதிமன்ற விளக்கமறியல் காலமும் ஒருவருடத்தை கடந்துவிட்ட நிலையில் அதனை தாண்டியும் மேலும் ஒரு வருடம் நீதவான் நீதிமன்றில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு தொடர் பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான பரீசிலனைகள் இடம்பெற்று வரு வதாக குற்றப் புலனாய்வு அதிகாரி மன்றில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர் ந்து மேற்படி 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டிருந் தார்.
வித்தியா படுகொலை வழக்கு 12 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
Reviewed by Author
on
January 08, 2017
Rating:

No comments:
Post a Comment