அண்மைய செய்திகள்

  
-

யாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை...


கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில் கஜரோகணன் கஜானன் கணிதத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும் இரவீந்திரன் பானுப்பிரியன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தனன் நான்காமிடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் 14 மாணவர்கள் கணிதத் துறையில் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், யோகேந்திரராசா சாகித்தியன் நான்காமிடத்தையும், திருமாறன் இளமாறன் ஐந்தாமிடத்தையும், மேலும் நான்கு மாணவர்கள் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

யாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை... Reviewed by Author on January 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.