அண்மைய செய்திகள்

recent
-

குழந்தையின் தலைக்குள் 3.7 லிற்றம் திரவம்: அகற்றிய மருத்துவர்கள்---படங்கள் இணைப்பு


7 மாத குழந்தையின் மண்டை ஓட்டுப்பகுதியில் இருந்து 3.7 லிற்றர் அளவு திரவம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கமலேஷ்- கவிதா தம்பதியினரின் 7 மாத மகன் மிருதுயுஞ்செய், ஹைட்ரோசீபாலஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான்.

இந்தவகை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டை ஓட்டுப் பகுதியில் திரவம் கோர்த்து தலைப்பகுதி தர்பூசணி அளவுக்கு பெரிதாக இருக்கும்.

இந்நிலையில், இவனது தலையில் இருக்கும் திரவத்தை அகற்றும் சிகிச்சை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.


அக்குழந்தையின், மண்டை ஓட்டுப்பகுதியில் இருந்து சுமார் 3.7 லிற்றர் அளவு திரவத்தினை வெளியில் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அந்த குழந்தையின் மண்டை ஓட்டுப் பகுதியில் 5 லிற்றர் அளவுக்கு திரவம் இருந்தது.


தற்போது சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் சிறுவன் இயல்பு நிலைக்குத் திரும்புவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 






குழந்தையின் தலைக்குள் 3.7 லிற்றம் திரவம்: அகற்றிய மருத்துவர்கள்---படங்கள் இணைப்பு Reviewed by Author on January 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.