அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ இன்று ஞாயிற்றுக்கிழமை (8) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 இராமேஸ்வரத்து மீனவர்களை கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் நேற்று சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

-இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கருப்பையா குமாரவேல் (வயது-44), முனியான்டி சுப்பிரமணியம்(வயது-39),சின்ன மணியன் நம்பு(வயது-41),சுந்தர ராஜ் கார்த்திகை சாமி-(வயது-65) ஆகிய 4 மீனவர்களை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின்னர் குறித்த 4 மீனவர்களையும் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகியிறுந்தனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த 4 மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதே வேளை கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்களும் கடந்த 6 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-

(8-1-2016)




தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு. Reviewed by NEWMANNAR on January 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.