மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் தேசிய பொங்கல் விழா முதல் நாள் நிகழ்வு….படங்கள் இணைப்பு
மன்னார் இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கையின் ஏனைய 24 மாவட்டங்களின் இளைஞர்சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள் இளைஞர் யுவதிகள் சுமார் 1500 மேற்பட்டவர்கள் விசேட தொடரூந்து மூலம் இன்று தலைமன்னார் கிராமத்தினை வந்தடைந்தது வந்திருந்த அரசஅதிகாரிகள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரையும் மன்னார் இளைஞர் யுவதிகள் மன்னார் அரசஅதிகாரிகள் சகிதம் வரவேற்றனர்..
மூன்று நாள் நிகழ்வான தேசிய பொங்கல் விழாவில் முதல்நாள் நிகழ்வானது இன்று 08-01-2017 தலைமன்னார் RTMS பாடசாலை வளாகத்தில் மதவழிபாட்டுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வானது இலங்கையின் உள்ள இளைஞர் யுவதிகளிடையே இனமத மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்படவே இவ்வாறான நிகழ்வுகள் உறவுப்பாலமாக அமையும் என்பதே இவ்பொங்கல் விழாவின் சிறப்பம்சமாகும்.
ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகைதந்தவர்கள் தலைமன்னார் கிராமத்தின் உள்ள மக்களின் வீடுகளில் தங்கி அவர்களுடன் தமது கலைசலாச்சாரவிடையங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் தேசிய பொங்கல் விழா முதல் நாள் நிகழ்வு….படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
January 08, 2017
Rating:

No comments:
Post a Comment