தை பொங்கலுக்காக தமிழில் வாழ்த்து கூறிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
தை பொங்கலை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தை பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கனேடிய வாழ் தமிழ் மக்களுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழில் வணக்கத்துடன் துவங்கும் அவரது 1 நிமிட பேச்சு ஆங்கிலம், கனேடிய மொழி கலந்து இந்த வாழ்த்துச் செய்தியை அளித்துள்ளார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களிடம் இல்லாத பண்பும், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் கொண்ட பிரதமரை கனடா பெற்றிருப்பது தனிச்சிறப்பு என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தை பொங்கலுக்காக தமிழில் வாழ்த்து கூறிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Reviewed by Author
on
January 15, 2017
Rating:

No comments:
Post a Comment