அண்மைய செய்திகள்

recent
-

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம்: தீப்பந்தாய் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு....


தாய்லாந்தில் விமான கண்காட்சியின்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தாய்லாந்தில் வெகுவிமரிசையாக விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சுவீடன் நாட்டின் JAS 39 Gripen விமானம் ஒன்று பார்வையாளர்களை சந்தோசப்படுத்தும் வகையில் சாகசங்கள் பல செய்து வந்த வண்ணம் இருந்தது. குறித்த விமானத்தினை 34 வயது விமானி Dilokrit Pattavee என்பவர் இயக்கி வந்துள்ளார்.

திடீரென்று குறித்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டினை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்ட தளத்தின் அருகாமையில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விமானி குறித்த விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் சம்பவயிடத்திலேயே விமானி Dilokrit Pattavee இறந்ததாக கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு நின்ற அந்த நொடியில் தீ கோளம் போன்று விமானம் விழுந்து நொறுங்கியது குழுமியிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம்: தீப்பந்தாய் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு.... Reviewed by Author on January 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.