அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை...வெள்ள அபாயம்!


பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது பொதுமக்களை உறையவைக்கும் அளவிற்கு குளிர் நிலவி வருகிறது.

நாட்டின் பெரும் பகுதிகள் பனியின் பிடியில் சிக்கித் தவிக்கினறன. இதனால் கிழற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் Essex, Norfolk மற்றும் Suffolk போன்ற பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என்றும் இதனால் உயர் அலைகள் எழும்பலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரை பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மேலும் Jaywick, Essex and Great Yarmouth போன்ற பகுதிகளில் உள்ள மக்களும் தங்கள் வீடுகளை காலி செய்யும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி மீட்பு சேவைகளுக்காக ஏராளமானோரை திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதில் Norfolk பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக கிழக்கு மற்று மேற்கு கடற்கரைகளில் உள்ள பகுதிகளில் மிகப்பெரிய ஆபத்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் ஸ்காட்லாந்து பகுதிகளில் பனியின் தாக்கும் சற்று குறைவாக இருக்கும் எனவும் இங்கு வெப்ப நிலை -3 டிகிரிகளில் இருந்தால், அங்கு அதன் வெப்ப நிலை சற்று மிதமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதன் ஆபத்து இன்றும் தொடரும் எனவும் அதனால் சாலை வழிகளில் செல்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் கவனமுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். பிற்பகலுக்கு பின்னர் புயலின் தாக்கம் மற்றும் குளிரின் தாக்கம் குறையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை...வெள்ள அபாயம்! Reviewed by Author on January 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.