11 ஆண்டுகளுக்கு பிறகு.. அதிரடி காட்டிய டோனிக்கு இதுவே முதன்முறை..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி முதன்முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் டோனி 36 பந்துகளில் 56 ஓட்டங்கள் சேர்த்தார். டி20 போட்டியில் இது இவருக்கு முதல் அரைசதமாகும்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் டோனி 11 ஆண்டுகள் கழித்து தனது 76வது போட்டியில் தான் முதல் அரைசதத்தை எடுத்துள்ளார்.
இதன்படி டி20 போட்டியில் அரைசதம் பதிவு செய்ய அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
முன்னதாக அயர்லாந்தை சேர்ந்த கேரி வில்சன் 42வது போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு.. அதிரடி காட்டிய டோனிக்கு இதுவே முதன்முறை..!
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment