அண்மைய செய்திகள்

recent
-

சந்திரனில் மனிதர்கள் வாழ முடியாது....காரணம் தெரியுமா?


பூமியில் இருந்து வாழும் மனிதர்கள் சந்திரனில் ஏன் வாழ முடியாது என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும் அல்லவா?

ஆனால் சந்திரனில் சென்று மனிதர்களினால் வசிக்க முடியாது என்பதை மட்டும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதற்கான காரணங்கள் என்ன? என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

சந்திரனில் மனிதர்கள் வாழ முடியாததிற்கு என்ன காரணம்?

வானில் இருக்கும் சந்திரனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அத்தகைய சந்திரனை நாம் தொலைவில் இருந்து மட்டுமே ரசிக்க முடியுமே தவிர அங்கு சென்று வாழ முடியாது.

ஏனெனில் நிலாவில் காற்று இருக்காது. பூமியின் புவிஈர்ப்பு விசையை விட, நிலாவின் ஈர்ப்பு விசை 6 மடங்கு குறைவாக இருக்கும்.

மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஈர்ப்பு விசை பூமியில் இருப்பதால் தான், அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.

ஆனால் அத்தகைய ஈர்ப்பு விசையானது, சந்திரனில் இல்லை என்பதால், காற்று வசதிகளும் இல்லை.

இதனால் தான் சந்திரனில் மனிதர்கள் வாழ முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

சந்திரனில் மனிதர்கள் வாழ முடியாது....காரணம் தெரியுமா? Reviewed by Author on February 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.