அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாபிலவு விமானப்படைத்தளம் முன் இரவிரவாக போராட்டம்!


முல்லைத்தீவு- கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் இரவிரவாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள 83 குடும்பங்களின் காணிகள்நேற்று கையளிக்கப்படவிருந்தது. எனினும்,நேற்று குறித்த பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.

 இந்நிலையில், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை தாம், அங்கிரந்து வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்து அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் விமானப்படைத் தளம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


கேப்பாபிலவு விமானப்படைத்தளம் முன் இரவிரவாக போராட்டம்! Reviewed by Author on February 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.