தமிழ் மக்களுக்கு விடியாத அறுபத்து ஒன்பது-கை விலங்கிட்டு கறுப்புக் கொடிப்போராட்டம்-மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,
ஆட்சி மாற்றத்திற்கு பின்னும் தமிழ் மக்களிற்கு எந்த விதமான வாழ்வியல் பிரச்சினைகளும் தீர்வதாக இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு , புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.
ஆகவே இவற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் வட கிழக்கில் சுதந்திர தினத்தன்று அந்த அந்த மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள் கறுப்புக் கொடி போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
-எனவே மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நாளான எதிர்வரும் சனிக்கிழமை(4) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கை விலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டம் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுவதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
(2-2-2017)
இவ்விடையம் தொடர்பாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,
ஆட்சி மாற்றத்திற்கு பின்னும் தமிழ் மக்களிற்கு எந்த விதமான வாழ்வியல் பிரச்சினைகளும் தீர்வதாக இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு , புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.

-எனவே மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நாளான எதிர்வரும் சனிக்கிழமை(4) காலை 8.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கை விலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டம் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுவதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
(2-2-2017)
தமிழ் மக்களுக்கு விடியாத அறுபத்து ஒன்பது-கை விலங்கிட்டு கறுப்புக் கொடிப்போராட்டம்-மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு.
Reviewed by NEWMANNAR
on
February 03, 2017
Rating:

No comments:
Post a Comment