அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தூய மரியன்னை ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது- படங்கள் இணைப்பு

காலை06-45 மணிக்கு  நடைபெற்றதுடன் மாலை 4- 45 மணிக்கு திருப்பலியுடன் திருச்சுருப பவனி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

மன்னார் தூய மரியன்னை ஆலயத்திருவிழா 24-01-2017 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
"நம்பிக்கை வாழ்வு"
"அருள் தரும் அருட்சாதனங்கள்"
"கிறிஸ்தவ அழைப்பு"
"அனைத்திலும் அன்பே சிறந்தது" 
"எழுச்சியின் இளையோராக" 
"திருக்குடும்பங்களாக"
 "எழுந்து தந்தையிடம் செல்வோம் "
"தியாகமான நற்கருணை"
எனும் மையப்பொருள் கொண்ட மறையுரையினை 09 நவ நாட்களும்
  •  அருட்பணி.மி.ஜெகன்.அமதி
  • அருட்பணி ஜேசுபாலன் அமதி
  • அருட்பணி பற்றிக்பிரசாந் அமதி
  • அருட்பணி வின்சன்ற் அமதி
  • அருட்பணி சுவின்  அமதி
  • அருட்பணி எட்வின் வசந்தராஜா அமதி
  • அருட்பணி றமேஸ் அமதி   இவர்களுடன் 01-02-2017 நற்கருணை விழாவினை அருட்பணி தேவராஜ் அமதி அவர்கள் சிறப்பிக்க   02-02-2017 திருவிழா சிறப்புத்திருப்பலியை  மன்னார் பேராலயப்பங்குத்தந்தை அருட்பணி பெப்பிசோசை அடிகளாருடன்  அருட்தந்தை தேவராஜ் கொடுதோர் அருட்தந்தை ரெஜினோல் கூட்டுத்திருப்பலியாக  ஒப்புக்கொடுத்ததுடன் சிறப்பு மறையுரையாக தூய மரியன்னையின் 03 நிலையின்  செயற்பாடுகள்
  • ஈடுபடும்
  • ஈடுபடுத்தும்
  • ஈடுபடுத்தபடும்
  செயற்பாடுகளில் இறைத்தாயானவள் தனது  பணியை திறமையாக தனது வாழ்நாளில்  வாழ்ந்து காட்டினால் அவளின் வாழ்வை  இறைமக்களாகிய நாமும் வாழ்வாக கொள்வோம்  எனும் மறைபொருள் விளங்கவும்  150 ஆண்டுகளாக  மன்னாரில் குடிகொண்டிருக்கும் தூயமரியன்னை(காணிக்கை மாதா) அன்னத்தேரில் வீதிப்பவனி வந்து இறைமக்களுக்கு தனது இறையாசியை வழங்கினாள்
சிறப்பு ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவுற்றது

தொகுப்பு-வை-கஜேந்திரன் -


























மன்னார் தூய மரியன்னை ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது- படங்கள் இணைப்பு Reviewed by Author on February 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.