தீர்வுக்கான பயணத்தில் மகிந்தவின் உதவி தேவை நாம் நாடி நிற்கின்றோம் என சம்பந்தன் உரை
இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிரந்தர தீர்வுக்கான பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம். இதற்காக அவரை நாங்கள் நாடி நிற்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஜப்பானிய தூதுவர் கெனிசி சுகுனுமா உட்பட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த வைத்தியசாலையை அமைக்க உதவிய ஜப்பான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். களுவாஞ்சிகுடி என்றதும் எனக்கு இராசமாணிக்கத்தின் ஞாபகம் வருகின்றது. அவர் மிகவும் நல்லவர். அவருடன் நான் சிறையில் இருந்துள்ளேன்.
இன்று நாங்கள் இந்தநாட்டில் ஒரு பேச்சுவார்த்தை மூலம் சமரசமாக ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக நாங்கள் அர்ப் பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். இதனூடாக ஒரு நிரந்தரமான, நீதியான தீர்வினைக் கண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் சம உரிமை அடிப்படையிலான ஒரு சமாதானத்தை உருவாக்கலாம் என எண்ணியுள்ளோம். இதனை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம்.
இப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக எமது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற பொழுது புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என்று கூறியிருக்கின்றார். உண்மையை கதைக்க வேண்டும். இதுவரையில் நடைபெ றுகின்ற பேச்சுவார்த்தைகளில் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அது என்னவென்றால் ஒருமித்த, பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் ஒரு தீர்வினை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டவர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக அமைய வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதாவது நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்கள் சிறுபான்மை மக்கள்,இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக அமையவேண்டும். நிச்சயமாக பிரியாத, பிரிக்கப்பட முடியாத மக்கள் அனை வரும் நிரந்தரமாக ஒன்றாய் இருக்கக்கூடிய தீர்வாக அமையவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனபடியால் நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கூறுவது என்னவென்றால் அவரை எனக்கு நன்றாக தெரியும். நீங்களும் எங்களுடைய இந்த பணியில் இணையவேண் டும் உங்களுடைய ஒத்துழைப்பை நாங்கள் எதிபார்த்து நிற்கின்றோம், உங்கள் ஒத்து ழைப்பை நாங்கள் நாடுகின்றோம்.
ஆனபடி யால் மக்கள் மத்தியில் துவேசத்தை ஏற்படுத்தாமல் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாமல் மக்களை ஒற்றுமைப்படுத்தி இந்த நாட்டினுடைய தேசிய பிரச்சினைக்கு எழுபது வருடகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை காண்பதற்கு நீங்கள் உதவவேண்டும். இது உங்கள் கடமை. இதனை தவற விடவேண்டாம் எனக்கேட்டுக்கொள்வதாக இரா.சம்பந்தன் தனது உரையில் தெரிவித்தார்.
தீர்வுக்கான பயணத்தில் மகிந்தவின் உதவி தேவை நாம் நாடி நிற்கின்றோம் என சம்பந்தன் உரை
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment