காணாமல்போன ஆசிரியை காட்டிற்குள் சடலமாக மீட்பு!
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றி வந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களின் பின் குறித்த ஆசிரியையின் சடலம் சிதைவடைந்த நிலையில் உடற்பாகங்களாக மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரிச்சுட்டான் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் உடற்பாகங்களாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீரிச்சுட்டான் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்தே நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரும் தொண் டர் ஆசிரியையுமான ஏ. ஜாலினி (வயது-31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த தொண்டர் ஆசிரியரது மரணம் தொடர்பில் மன்னாரில் உள்ள அரச திணைக்களமொன்றில் கடமையாற்றுகின்ற அவரது கணவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு மீட்கப்பட்ட சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த ஆசிரியர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியின் போது காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் அவரது சடலம் ஆடைகள் மற்றும் தடயங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பெண்ணின் கணவர் அண்மையில் ஓமந்தைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
காணாமல்போன ஆசிரியை காட்டிற்குள் சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment