கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை குழப்ப விமானப்படையினர் சதி.... புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல்
காணிவிடுவிப்பை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களையும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும் அங்கு நிலைகொண்டுள்ள விமானப் படையினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுத்து வருவதாக கேப்பாப்பிலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கோரி கடந்த பதினேழு நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தம்மையும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருபவர்களை விமானப்படையினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுத்து வருவதாக கேப்பாபிலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
அதனைவிட போராட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்க@டாக போராட்டத்தை குழப்ப சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் அவ்வாறான சம்பவங்கள் சில இடம்பெற்றதாக வும்,இவ்வாறு எத்தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் தாம் காணிக்குள் செல்லும்வரை போராட்டம் நிறுத் தப்படாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக் குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங் களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பல்வேறு விதங்களில் முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் மேலும் பலர் தமது ஆதரவுகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை குழப்ப விமானப்படையினர் சதி.... புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல்
Reviewed by Author
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment