வடக்கு மாகாணசபை முன்பாக பட்டதாரிகள் நேற்று போராட்டம் 13-ம் திகதி ஆளுநரை சந்திக்கவும் முடிபு,,,,
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்பை வழங்கக்கோரி நேற்று பதி னொராவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தை வடக்கு மாகாணசபை முன்பாக முன்னெடுத்திருந்த நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி பட்டதாரிகளுக்கான வேலைவா ய்ப்பு தொடர்பில் ஆராய்வது என தீர்மானி க்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த பத்து நாட்களாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று பதினோராவது நாளாக வடக்கு மாகாண சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டு தமக்கான நியாயத்தை வழங்குமாறு கோரியிருந்தனர். காலை ஒன்பது மணியளவில் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக வெளியே முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் வடக்கு மாகாண சபையின் உள் வளாகத்திற்குள் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரினை பட்டதாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாட்டினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செய்தார்.
இதனை அடுத்து பட்டதாரிகள் சார்பில் இரு பெண்கள் உட்பட ஏழு பிரதிநிதிகள் உறுப்பினர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒருமணித்தியாலம் வரை நடைபெற்ற நிலையில், வடக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் பட்டதாரிகளுக்கு கூறப்பட்டது.
எனினும் அந்த வெற்றிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை நிரப்புவதற்கு போதுமானதாக இல்லாமல் இருந்தமையால் வேறு ஏதும் யோசனைகளை முன்வைக்குமாறு பட்டதாரிகள் தரப்பில் கோரப்பட்டது. பட்டதாரிகளை மேலதிகமாக உள்வாங்குவதற்கான அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது.
அவருடனான சந்திப்பை அடுத்தே இது தொடர்பில் கூற முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அவைத்தலைவர் ஆகியோரால் கூறப்பட்டது. மேலும் வட க்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற் றிடங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யுமாறும் அவைத்தலைவர் சிவஞானத்தினால் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கடிதம் ஒன்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநரை பட்டதாரிகளின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு.
அதுவரை பட்டதாரிகளை அமைதியாக இருக்குமாறும் கோரப்பட்டது. எனினும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்த பட்டதாரிகள், ஆளுநருடனான சந்திப்பினை அடுத்து தமது போராட்டம் தொடர்வதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பட்டதாரிகளின் இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண சபையில் வழமைக்கு மாறான அதிகளவான பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டதோடு, ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தமது மக்கள் பிரதிநிதிகளை தாம் சந்திக்க வரும் போது இவ்வாறான பாதுகாப்புக்கள் குறித்து தமது கவலையை ஊடகங்களிடம் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணசபை முன்பாக பட்டதாரிகள் நேற்று போராட்டம் 13-ம் திகதி ஆளுநரை சந்திக்கவும் முடிபு,,,,
Reviewed by Author
on
March 11, 2017
Rating:

No comments:
Post a Comment