7 விநாடிகளில் 98 கோடி கொள்ளை: என்ன நடந்தது தெரியுமா?
ஹாங்காங் நகைக்கடை ஒன்றில் சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் ஏழு விநாடிகளில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் சிம் ஷா சூய் என்ற இடத்தில் நடந்த இந்த திருட்டு, அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
முகமூடி அணிந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் உள்ள கண்ணாடியை கோடாரியால் உடைத்து இந்த துணீகர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
அவர் திருடியது ஹாங்காங் டொலரில் 5 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.98 கோடி) மதிப்பிலான வைர மோதிரம் எனத் தெரிவந்துள்ளது.
கடை வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையடித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் அதுவும் அதிக ஜனநடமாட்டம் இருக்கும் பகுதியில் நடந்த இந்த கொள்ளை விசாரணை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நகைக்கடையில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் இது முதன் முறை எனவும், குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கெனவே இங்கு வந்து நோட்டமிட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிக பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் ஹாங்காங்கில் நடந்த இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
7 விநாடிகளில் 98 கோடி கொள்ளை: என்ன நடந்தது தெரியுமா?
Reviewed by Author
on
March 11, 2017
Rating:

No comments:
Post a Comment