திருமணம் நின்ற சோகத்திலும் உலக சாதனை படைத்த பிரபல பாடகி....
காயத்ரி வீணையில் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 67 பாடல்களை இசைத்து பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகியான வைக்கம் விஜயலட்சுமி சினிமானில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
பிறவியிலேயே பார்வையற்றவரான விஜயலட்சுமிக்கு போன வருடம் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், திருமணம் நின்று விட்டதாக விஜயலட்சுமி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இந்த சோதனையான நேரத்திலும் கூட அவர் தற்போது இசையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஒற்றை கம்பி கொண்ட காயத்ரி வீணையில் தொடர்ந்து 5 மணி நேரம் 67 பாடல்களை இசைத்து அசத்தினார். இது புதிய சாதனையாகும்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய கனவு நிஜமாகி உள்ளது. இந்த சாதனையை என்னுடைய குருக்கள் மற்றும் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.
திருமணம் நின்ற சோகத்திலும் உலக சாதனை படைத்த பிரபல பாடகி....
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment