மீனவர் சுட்டுக் கொலை: இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு....
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதாம்பாலம் பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், தங்கச்சிமடம் ஐயன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.
பிரிட்ஜோவின் உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி முடித்தது.
இந்நிலையில், பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதால், போராட்டம் வெடிக்கும் என்ற அச்சத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம், துணை வங்கிகள், எழும்பூரில் உள்ள புத்தக விஹார் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மீனவர் சுட்டுக் கொலை: இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு....
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment